தமிழர் பாரம்பரிய வீரம் இளவட்டகல் தூக்குதல்

இளவட்ட கல்
வீரம் எங்கள் பாரம்பரியம்


இளவட்டக்கல் ஒரு எடை-தூக்கும் விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி-விளையாட்டு நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது மறவர்-குல வழக்கம். இளவட்டம் தூக்கும் கல் இளவட்டக் கல்.

 சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் இளவட்டக்கல்:
தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்ட கல்லை காணலாம்.
நமது நெற்குப்பை கிராமத்திற்கு அருகில் உள்ள பரியாமருதிபட்டில்  மூன்று இளவட்டகல் உள்ளது.அதன் எடை அளவு 1.ஐம்பது கிலோ2.எழுபதுஐந்து கிலோ3.நூறு கிலோ  நெற்குப்பை கிராமத்தில் ஒரு கல் உள்ளது அதன் எடை அளவு 125 கிலோ இருக்கிறது.

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும்.
இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.
முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.
புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்


No comments:

Post a Comment

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...