Saturday, August 11, 2018

தமிழர் பாரம்பரியம்

 தமிழர் பாரம்பரியம்  பற்றி பார்ப்போம்..........            

      1 சிலம்பாட்டம்

      2மயிலாட்டம்
      3 ஓயல்லட்டம்
      4தப்பட்டம்

     

                                                                                                                                                                                                                                                     சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும்பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்'என்ற சொல் "சிலம்பல்என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்என்ற பொருள்.மலைப்பகுதி சிலம்பம்தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும்பண்பாட்டு சின்னமாகவும் கலாசார மாகவும்,"சிலம்பல்என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசைபறவைகளின் கீச்சொலிமரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசைமிருகங்களின்இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்என்ற பெயருண்டு.        கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போனகாரணங்களால்தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்என்ற பெயர் ஏற்பட்டது. 
  1. சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்தியர் முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில்குறிப்பாக சிலப்பதிகாரத்திலல் சிலம்பம் ஆடுவதற்கான கம்புகத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்என்ற பெயரிலும்கலிங்கத்துப்பரணியில் என்ற வரிகள் மூலம், "தண்டுஎன்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது.திருவிளையாடற்புராணத்திலும்சிலம்பம் விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 
     
                                          
                                                          "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே"


சிலம்பம் பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும்அதன் காரணமாக தான்  "கராத்தே"  என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்" .
கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது. 
சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் 
விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது. 
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது .அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவதாக  கருதப்படுகிறது .



. 

சிலம்பத்தின் வகைகள் சுவடு: 
                   வம்சம் படத்தில் இதன் வகைகளை பாடல்களாக வரும்
              இதோ


                           





















                                                 1.தெக்கன் சுவடு
                   2.வடக்கன் சுவடு
                   
3.பொன்னுச் சுவடு
                   
4.தேங்காய் சுவடு
                   
5.ஒத்தைச் சுவடு
                   
6.குதிரைச்சுவடு
                   
7.கருப்பட்டிச் சுவடு
                   
8.முக்கோணச் சுவடு
                   
9.வட்டச் சுவடு
                 
10.மிச்சைச் சுவடு
                 
11.சர்சைச் சுவடு
                 
12.கள்ளர் விளையாட்டு
                 
13.சக்கர கிண்டி
                 
14.கிளவி வரிசை
                 
15.சித்திரச் சிலம்பம்
                 
16.கதம்ப வரிசை
                   17.கருநாடக வரிசை   
வம்சம் படத்தில் ஒரு பாடல் வரும் அந்த படத்தில் சுத்தப்படும் சிலம்பாட்டம் எங்கள் ஊர் நெற்குப்பை கீழத்தெரு சேர்ந்தவர்களால் சிலம்பாட்டம் சுத்தப்படும்.அதற்கு சான்று இதோ




















கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணிஎன்ற நூலில் சிலம்பம்விளையாடுவதால் வாதம்பித்தம்கபம் இவைகளைத் தவிர கம்பு சூத்திரம்குறுந்தடி சிலம்பம்நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலைமருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன. 
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் 
உள்ள ஒவ்வொரு நாடிநரம்பும்தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்துதன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக்(தடியை) கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமைஆற்றல்விரைவுத்திறன்உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர்.இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா,பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழக்கத்தில் பல்வேறு மாவட்டம்  சிவகங்கை மாவட்டம் அதிகமாக சிலம்பம் கற்கிறார்கள் .குறிப்பாக நெற்குப்பை கிராமத்தில் பயிற்றுவிக்கப்பட்டுகிறது ..



3.ஒயிலாட்டம்: 

ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே, இவ் ஆட்டத்தின் பெயராகியுள்ளது. இது முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை . ஆண்மையின் கம்பீரத்தை உணர்த்தும் இந்தக் கலையாட்டத்தினைப், பெண்கள் கலந்து கொண்டு ஆடுவதில்லை. இந்த ஆட்ட அடவுகள், ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். பத்து முதல் 12 பேர் கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர் ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு திசையிலோ, அல்லது நேர்த்திசையிலோ நின்று கொண்டு ஆடுவார்கள். சிறகை விரித்தால் மயிலாட்டம், சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம் என்று இக்கலையின் தன்மை வர்ணிக்கப்படுகிறது.



                                                              



















பானைத்தாளம்தவில்சிங்கிசோலக் போன்ற இசைக்கருவிகளை இந்த ஆட்டத்தில் பயன்படுத்துவதுண்டு. பானைத்தாளம் என்பது, குடத்தில் மாட்டுத்தோலைக் கட்டி இசைக்கப்படும் வல்லிசைக் கருவியாகும். பறைக்குப் பதிலாக இந்தக் கருவியை இசைக்கிறார்கள். இவைகளோடு கலைஞர்கள் காலில் அணிந்திருக்கும் சலங்கை இன்னுமொரு கருவியாக மாறி அடவுக்கேற்ப இசைக்கும். இந்த இசைக்கருவிகளைக் கட்டுப்படுத்தி வகைப்படுத்துவதே சிங்கி என்ற இசைக்கருவியின் வேலை. பாடலும், ஆடலும் நிறைந்த இக்கலையில், பாடத்தெரிந்தவருக்கு ஆடத்தெரிந்திருக்கத் தேவையில்லை. பாடலுக்குத் தகுந்தவாறுஅடவுவைத்துஆடற்கலைஞர்கள்.ஆடுவார்கள்பெரும்பாலும் இராமாயணக்கதைகளே பாடல்களாகப் பாடப்படுகின்றன. இது தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதைமுருகன் கதைசிறுத்தொண்டர் கதைவள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. ரெட்டியார் மற்றும் முக்குலத்தைச் சேர்ந்த சில இனத்தினர், இக்கலையை மரபு ரீதியாக நிகழ்த்தினர். இப்போது தலித்துகள் உள்ளிட்ட பிற இனத்தினரும் இக்கலையாடலில் ஈடுபடுகின்றனர். மரபுசார்ந்து இயங்கிய பலர் கிறித்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களிலும் அண்மைக்காலமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளைப் பாடி ஆடுகின்றனர்.

ஒயிலாட்ட முறை:

ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் உள்ளன. ஒழுங்காகத்
தலைவாரியிருப்பார்கள். கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்திருப்பதும், தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளைக் கட்டியிருப்பதும் அவசியம். பெரும்பாலும் கையில் பிடித்திருக்கும் துணி சிவப்பு நிறத்தில் இருக்கும். தலைமையாளர் மட்டும் பச்சை நிறத்தில் பிடித்திருப்பார். வெள்ளை வேட்டியை தார் பாய்ச்சிக்கொள்வதும் மரபாகும். தொடக்கத்தில் கை கூப்பி, ஒரு காலை மட்டும் தட்டி கடவுள் வணக்கம் செய்து, அடுத்து தரையைத் தொட்டு அவை வணக்கம் செய்து விட்டு அடவுகளைத் தொடங்குவர். இடையிடையே களைப்பைப் போக்கிக் கொள்ள, பாடல் பாடும் அண்ணாவி விசிலடித்து ஆட்டத்தை நிறுத்திக் கொள்வார். பெரும்பாலும் ஒயிலாட்டக்குழுவின் தலைவரோ அல்லது வாத்தியாரோதான் அண்ணாவியாக செயல்படுவார். கடைசிப்பாடலுக்கு முன்னர் வாத்தியார் பார்வையாளர்களுக்கு நன்றி சொல்வார். கடைசி அடவு முடிந்ததும் அனைத்துக் கலைஞர்களும் பூமியைத் தொட்டு வணங்கிவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். ஆதி காலத்தில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இக்கலையாடலில் சிறந்த ஆண்களையே பெண்கள் மணம் முடிக்க விரும்பியதாக குறிப்புகள் உண்டு.
ஒயிலாட்ட இலக்கணம்:
ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்க ஆட்ட இலக்கணங்களும் உண்டு. ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் என்றும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்து அடி, சாரி, தட்டு என்றும் வகைப்படுத்தியுள்ளனர். தக்கு என்பது மெதுவான ஆட்டத்திற்கான இலக்கணம். வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர். வேகமான அடவுகள் முதலாம் காலத்தில் தொடங்கி மூன்றாம் காலத்தில் நிறைவுறும். வாத்தியார் பாடலைப்பாட, குழுவினர் அதே வரிகளைப் பாடி ஆடுவார்கள். மெதுவாகத் தொடங்கும் அடவுகள் மெல்ல, மெல்ல உச்சம் பெறும். தொடக்கம் முதல் இறுதிவரை கலைஞர்களின் அடவுகள் கம்பீரம் குறையாமல் இருக்கும். ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் கலைஞர்களின் கழுத்துக்கு கீழே, இடுப்புக்கு மேலே உள்ள உடல்பகுதிகள் வளையக்கூடாது. ஒயிலாட்டம் ஆடும்போது காலில் கட்டிய சலங்கை "கெம்பீரிக்க வேண்டும்" என்பது நியதி.
ஆளோடு ஆளு,
உரசாமல்,
உங்கள் ஆளிலே ஒரு முழம்,
தள்ளி நின்று,
காலோடு காலு உரசாமல்,
உங்கள் கைபிடித்துணி,
தவறாமல்,
மேலோடு மேலு,
உரசாமல்,
உங்கள் வேரூவை தண்ணி,
சிதறாமல்.."
என்று நீளும் பாடல் ஒயிலாட்டத்தின் இலக்கணங்களை வரையறுக்கிறது.மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்பூத்தூர் மாவட்ட கோவில் விழாக்களில் இப்போதும் அவ்வப்போது ஒயிலாட்டம் நிகழ்ந்து வருகின்றது. மதுரை குருநாதப்பிள்ளை, வாசகம் பிள்ளை ஆகியோர் இக்கலையில் குறிப்பிடத்தக்க கலைஞர்கள்.
2.தப்பாட்டம்:


·         பறை அல்லது தப்பு என்கின்ற இசைக்கருவியை இடது கை தோளில் தொங்க விட்டபடி தன் மார்போடு அணைத்து நீளமான குச்சியை இடது கையினாலும், சிறிய குச்சியை வலது கையினாலும், பிடித்து தாளங்களை அடித்து அடவுகளை ஆடுவது பறை ஆட்டம் ஆகும். தப்பு அடித்து ஆடுவதால் தப்பாட்டம் எனவும், . இப்பறை மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிச் சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை இழுத்து ஒட்டிச் செய்யப்படும்.

ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்ட "சிம்புக்குச்சி' (மூங்கில் குச்சி) யைப் பயன்படுத்துவர். இதனை இடக்கையிலும், மற்றும் பூவரசக்கம்பில் செதுக்கப்பட்ட அரையடி நீளமும் மூன்று செ.மீ. சுற்றளவுமுள்ள "அடிக்குச்சி' வலது கையிலும் வைத்து அடித்து ஓசை எழுப்பப்படும். தப்பாட்டம் முன்பு "சாவு மேளம்' என்றும் உயர் சாதியினர் கூறினர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில்களிலும், தேவாலயங்களிலும், அரச விழாக்களிலும் தப்பாட்டம் ஆடப்படுகிறது. இவ்வாட்டத்தில் பல அடிமுறைகள் உள்ளன. அவற்றில் சில சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, ஜாயிண்டு அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, சினிமா அடி, மாறடித்தல் அடி,வாழ்த்து அடி என்பவையாகும். இவற்றுக்கு துணைக் கருவிகள் ஆவன மரம், சிங்கி, செண்டை, மேளம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.


4.காவடியாட்டம்:
காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார் தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.

காவடி சொர்பிறப்பு:
கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப்பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. "காவடியாட்டம்" என்பது "காவடி", "ஆட்டம்" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடியாக எழுந்தது எனலாம். "காவடி" என்னும் சொல் "காவுதடி" என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர்.


காவடியின் தோற்றம் குறித்த நம்பிக்கைகள்:
காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகியிருக்கலாம் என சான்று கிடைக்கிறது. சிந்துவில் கிடைத்த சித்திர வடிவ எழுத்துகளில் காவடி எடுப்பதை போன்ற தோற்றமும் உள்ளது .அதற்கு கொடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்ற வார்த்தைகளுக்கும் பொருந்தி வருவதால் சிந்து எழுத்து தமிழே என்று "சிந்து வெளியில் முந்து தமிழ் " என்ற நூலில் நா.ப.பூரணச்சந்திர ஜீவா பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் சமயத் தொடர்புள்ள விடயங்களின் தோற்றங்கள் தொடர்பில் கதைகள் இருப்பது போலவே காவடியின் தோற்றம் குறித்தும் கதை ஒன்று உள்ளது. இதன்படி, அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான இடும்பன், சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளைக் காவுதடியில் சுமந்து கொண்டு பொதிகைமலை நோக்கிச் சென்றானாம். பழநியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுப் இளைப்பாறிப் பின் மீண்டு தூக்க முயற்சித்தபோது தூக்க முடியவில்லையாம். அப்போது சிறுவனாக உருக்கொண்டு வந்த முருகப் பெருமான் மலைமேல் இருந்து இடும்பனைக் கேலி செய்யவே சிறுவனை நோக்கிப் பாய்ந்த இடும்பன் தவறி மலையில் இருந்து உருண்டு இறந்தான். பின்னர் அவனை உயிர்ப்பித்த முருகன், இடும்பனின் கோரிக்கைக்கு இணங்கி, இடும்பன் அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவுதடி (காவடி) எடுத்துவரும் பக்தர்களின் குறைகள் தீர்ந்துவிடவும் வரம் அளித்தாராம். அதிலிருந்து, முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாக ஆகியது எனவும், அக்காவடியை கோவிலில் இடும்பன் சந்நிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது. இக் கதையில் இருந்து காவடிக்கும், காவுதடிக்கும் உள்ள தொடர்பு புலப்படுவதையும் கவனிக்கலாம்.

காவடி:
காவடியாட்டத்திற்குப் பயன்படும் கருவியே காவடி எனப்படுகிறது. இது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது. பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி, மயிலிறகு போன்றவற்றினால் காவடிகள் அழகூட்டப்படுகின்றன. தற்காலத்துக் காவடிகள் பல கூடிய அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இதன் அடிப்படையான பகுதி ஒரு தடியே.

 இத் தடியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும். இதன் மேல் அழகான குஞ்சங்களுடன் கூடிய பட்டுத்துணி போர்த்தப்பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் ஏராளமான மயில் இறகுகளைச் சேர்த்துக் கட்டி அழகூட்டியிருப்பர். வளைவுப் பகுதியின் உச்சியிலும் உயரமான கூம்பு வடிவான அலங்காரக் கூறு அமைந்திருக்கும். எனினும், காவடிகள் வேறுபட்ட அலங்காரங்களுடனும் அமைந்திருப்பது உண்டு. பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும். இது 5 கிலோ தொடக்கம் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும். ஆனால், சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன.



காவடிஎடுத்தல்:
வழிபாட்டுத் தொடர்பான காவடி எடுத்தலில், குறிப்பாக நேர்த்தி வைத்துக் காவடி எடுத்தலில், தங்களை வருத்திக்கொள்ளும் நடைமுறைகளைக் காண முடியும். சிலர் ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேல்களை ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னத்தினூடாக வரும்படி குத்திக்கொண்டும், இன்னொரு சிறிய வேலை நாக்கினூடாகக் குத்தியபடியும் காவடி எடுப்பர் இது "அலகு குத்துதல்" எனப்படும். தவிரத் தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாகக் குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்கக் காவடி ஆடுவர். இது "செடில் குத்துதல்" எனப்படுகின்றது.

இது தவிர உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர். காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அது "பறவைக் காவடி" எனப்படும். இருக்கும் நிலையில் தொங்குவது "தூக்குக் காவடி" ஆகும். பறவைக் காவடியிலும், தூக்குக் காவடியிலும் காவடி எடுப்பவர் சுமையைத் தோளில் சுமப்பதில்லை. ஆனால், அவரே காவுதடியில் சுமை போல் சுமக்கப்படுவதைக் காணலாம்.


காவடி ஆட்டத்துக்கான இசை:
காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும்தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.

தொழில்முறை காவடியாட்டம்:
தொழில்முறைக் காவடியாட்டம், தற்போது தனி நிகழ்ச்சியாக அன்றிக் கரகாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாகவே இடம்பெற்று வருகிறது. இதில் ஆட்டக்காரர் மேற்சட்டை அணியாமல் முருக பக்தனைப்போல் வேடம் புனைந்து ஆடுவார். தொழில்முறைக் காவடியாட்டத்தில், ஆடுபவர், சுழன்றாடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், வில்லாடுதல், கைவிரித்து ஆடுதல், வரவேற்க ஆடுதல் என்னும் ஆறு முறைகளைப் பயன்படுத்தி ஆடுவது வழக்கம். தோளின்மீது காவடியை வைத்து ஆடும் மரபு வழிக்குப் புறம்பாக தொழில்முறைக் காவடியாட்டக் கலைஞர்கள் தமது உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் காவடியை வைத்து ஆடுகிறார்கள்[2]. இதைவிட காவடியுடன் ஏணிமீது ஏறுதல் போன்ற சாகசச் செயல்களையும் செய்து காட்டுகிறார்கள்.

கலைத்திற விளையாட்டு:
கைகளைப் பயன்படுத்தாமல் காவடியை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கும், தோளிலிருந்து பின்கழுத்துப் பிடரிக்கும், பிடரியிலிருந்து தலை-உச்சிக்கும் ஏற்றி ஆடவைத்துக் காட்டிப் பின்னர் முறையை இறங்கி ஆடச் செய்து காவடிக் கலைஞர் தம் திறமையை வெளிப்படுத்துவர். இந்த வகையில் காவடி ஒரு விளையாட்டு.

காவடியின் வகைகள்:
பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி
தூக்குக் காவடி
எனது பார்வை
                                                                                                                                                                   

எங்கள் ஊர் நெற்குப்பையில் பழனி தைப்பூசம் முன்னிட்டு இங்கு    இருந்து                காவடி புறப்படும்.

கரகாட்டத்தைப் போலக் காவடியாட்டம் நாட்டுப்புற ஆட்டக் கலையாகும். இது முருக வழிபாட்டிற்குரிய கலையாகத் திகழ்கிறது. எடை மிகுந்த பொருள்களைத் தண்டின் இரு முனைகளிலும் சமமாகக் கட்டி இறைவனை வேண்டி ஆடிப் பாடி ஆடுவது காவடியாட்டம் ஆகும்.
    சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான புறநானூற்றில் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது தங்களுடைய பொருள்களை ஒரு தண்டின் இரு முனைகளிலும் கட்டிச் சென்றனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. ஒளவையார் தமது உடைமைகளை இது போன்று தண்டில் கட்டிச் சென்றார் என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.
    காவினெம் கலனே (புறம். 206)
    புறநானூற்றின் பாடலில் இடம் பெறும் “கா அல்லது காவுதல்” என்னும் சொல் இரு முனைகளிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு தண்டினைத் தோளில் வைத்துச் சுமத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. காவுத் தண்டு அல்லது காவுதடி என்னும் சொற்கள் காவடியின் தண்டு அல்லது காவடித்தண்டு என்றாயிருக்கலாம் என்று தமிழ்க் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இச்சொல்லே பின்னர்க் காவடி என்று சுருக்கமாக வழங்கப்படுகிறது.
காவடியாட்டம் இரு முறைகளில் ஆடப்படுகிறது.
  • பக்திக் காவடியாட்டம்
  • ஆட்டக் காவடியாட்டம்
6.2.1 பக்திக் காவடி
    முருகனை வழிபடும் பக்தர்கள் தாங்கள் முருகனுக்குப் படைக்கும் பொருள்களைத் தோளில் சுமந்து, முருகனை நினைத்துப் பாடி ஆடி நேர்த்திக் கடனைச் செலுத்துவது பக்திக் காவடி எனப்படும். புராணத்தில் காவடி சுமப்பதைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனின் அடியவனாகக் கருதப்படும் இடும்பன் முருகனை வழிபடத் தன் தோளில் இரு பக்கமும் இருமலைகளைக் கட்டிச் சுமந்து வந்தான் என்று கூறப்படுகிறது. அதே போல் முருகனை வழிபடும் பக்தர்கள் பங்குனித் திருநாளில் தங்கள் காணிக்கைகளைத் தோளில் சுமந்து காவடிச் சிந்து பாடல்களைப் பாடிக் கொண்டு “அரோகரா” என்று சொல்லிய வண்ணம் சுமந்து செல்வர்.
         முருகனை வழிபட வரும் அடியவர்கள் ஒரு தண்டின் இரு முனைகளின் பக்கத்திற்கு ஒன்றாகப் பூக்களால் இரண்டு மூங்கிற் கூடைகளைக் கட்டித் தொங்க விட்டுச் சுமந்து கொண்டு வரும் காவடி     “பூக்காவடி”     அல்லது “பூங்காவடி” என்று அழைக்கப்படுகிறது. அதே போல் பால் நிரம்பிய இருகுடங்களைக் கட்டி வருவது “பால்காவடி” என்றும், உணவு தானியங்களை அல்லது சமைத்த உணவைக் கட்டிச் சுமந்து செல்வது “அன்னக் காவடி” என்றும் அழைக்கப்படுகின்றன.
    இவ்வழிபாட்டு முறை கழுகு மலையிலும், பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருத்தணி, திருச்செந்தூர் முதலிய அறுபடை வீடுகளிலும் காணப்படுகிறது.
  • ஆட்டக் காவடி
    முருகனின் வழிபாட்டுச் சடங்காகக் கருதப்பட்ட இக்காவடியாட்டம் பொதுமக்கள் கண்டு களிக்கும் ஆட்டக் கலையாகவும் விளங்குகிறது. ஒரு தண்டின் இரு முனைகளிலும் இரு பலகைகளைப் பொருத்தி அந்தப் பலகைகளின் மேற்புறத்தை மூங்கில் பட்டைகளால் இணைத்து அதன்மேல் பட்டுத் துணியை இணைத்துக் கட்டுகின்றனர். இருமுனைகளிலும் மயிலிறகு செருகப்பட்டு தோளில் வைத்து, காவடி ஆடப்படுகிறது இக்காவடியாட்டம் கோவில் திருவிழாக்களில் முக்கியமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் தலை சிறந்த நாட்டுப்புறக்கலை வடிவமாகத் திகழ்ந்து வருகிறது.
6.2.2 கையாளும் முறை
    நாட்டுப்புறக் கலையான காவடியாட்டம் தனியாக ஆடப் பெறுவதில்லை. கரகம், பொய்க்கால் குதிரையுடன் சேர்ந்து ஆடப்படுகிறது. காவடியாட்டக் கலைஞர் ஒரு காவடியைத் தம் உடலின் தலை, நெற்றி, காது, கண், மூக்கு, முதுகு, கழுத்து, முன்புறக்கைகள், வயிறு போன்ற பல்வேறு உடல் உறுப்புகளில் நிறுத்தி முன்னும் பின்னும் ஆட்டுகின்றனர். மேலும் முதுகில் காவடியை இருத்தி அடவுகளைச் செய்து கொண்டே, காவடியைத் தலைக்குக் கொண்டு வருவர். மேலும் தலையில் காவடி வந்தவுடன் கையால் பிடிக்காமல் காவடியைச் சுழற்றுவர். இவ்வாறே நெற்றி, கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளும் வைத்துச் சுழலவிடுவர். இவை அனைத்தும் அடவுகளோடு சேர்ந்து ஆடப்படும்.
    காவடி ஆட்டத்தின் போது ஐந்து வித முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  1. காவடியை ஏதேனும் உறுப்பில் வைத்து மேலும், கீழும் ஆட்டுதல்.
  2. ஓர் உறுப்பின் மேல் காவடியை வைத்து, கைகளால் பிடிக்காமல் மேலும், கீழும் அசைத்து, கால்களில் வட்டமாக அடவுகளை ஆடுதல். 
  3. காவடியைக் கையைத் தவிர்த்து ஏனைய உறுப்புகளின் மீது இருத்தி ஆடுதல். 
  4. காவடியைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடுதல். 
  5. காவடியை ஓரிடத்தில் வைத்து விட்டு, தனியாக அடவுகளைச் செய்தல் என்ற ஐந்து முறைகள் இக்காவடியாட்டத்தின்போது பின்பற்றப்படுகின்றன.
    காவடியாட்டத்தில் கரகாட்டத்தைப் போலவே பல வியப்பூட்டும் செயல்கள் செய்யப்படுகின்றன. பல பேர்கள் தாங்கி நிற்கும் ஏணியின் ஒவ்வொரு இடை மூங்கிலுக்கும் இடையில் புகுந்து உயரத்தை அடைந்தவுடன் இரு ஏணிக்கால்களிலும் உடலைக் கிடத்தி முதுகு, வயிற்றுப் பகுதியில் காவடியை வைத்துச் சுழல விடுவர். மேலும் இரு ஏணிக்கால்களிலும் கால்களை வைத்துத் தலையில் கரகத்தைச் சுழல விடுவர். அவ்வாறு சுழலும் போது ஒரு காலை மட்டும் தூக்கி நிற்பர். பிறகு ஏறியது போல, மீண்டும் இடையில் புகுந்து, பழைய நிலைக்கு வருவர்.
6.2.3 இசைக்கருவிகள்
    கரகாட்டத்தைப் போல, காவடியாட்டத்திற்கும் நையாண்டி மேளமே பக்க இசையாக இசைக்கப்படுகிறது. இது இரண்டு நாகசுரம், இரண்டு தவில், ஒரு ஒத்து, இரண்டு பம்பை, ஒரு கிடுகிட்டி, ஒரு உறுமி, ஒரு தமுக்கு போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு விளங்குகிறது. காவடியாட்டத்தில் காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கிளிக் கண்ணி, மகுடி போன்ற பல மெட்டுக்களுடன் கூடிய நாட்டுப்புற இசைப் பாடல்கள் இடம் பெறுகின்றன.
    நையாண்டி மேள இசைக்கு ஏற்பக் காவடியாட்டம் நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேள இசைக்கு ஆட முடியாத இடத்தில், காவடியை அசைத்துத் தாளத்திற்கு ஏற்ப அமைப்பர். இவ்வாறு காவடியாட்டம் ஒரு வழிபாட்டுக் கலையிலிருந்து மாறி அனைவரும் சுவைக்கும் ஓர் ஆட்டக் கலையாகவும் விளங்கி வருகிறது.


5.மயில்லாட்டம்:
மயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.

மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம்  என்று
குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.


2 comments:

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...