Monday, August 27, 2018

நெற்குப்பை

நெற்குப்பை


  google maps;https://goo.gl/maps/daLA9Ye5Yvs
நெற்குப்பை பெயர்காரணம்;
நெற்குப்பையில் நெல் வயல்கெல்லம் கண்டமிடமெல்லாம் குப்பை போன்று காணப்பட்டதல் நெற்குப்பை என்று பெயர் வந்தது. கண்டமிடமெல்லாம் விளைன்திர்க்கும்.

நெல்கள் குப்பை  போன்று காணபடுவதால் பெயர் நெற்குப்பை என்று வந்தது.முப்பது மேற்பட்ட கோவில்கள்உள்ளன.இங்கு உள்ள மக்கள் விவசாயும் கால்நடைகள் மேய்யப்பத பிரதான தொழிகள் இருந்தது. விவசாயம் பிரதான தொழிகள் இருந்தது.50 சதவிகிதம் பேர் மட்டும் விவசாயம் செய்கிறார்கள்.நெற்குப்பை பிரான்மலை உள்ளது.பூலங்குறிச்சி மலை உள்ளது.
அடிப்படைகள் நாடு இந்தியா தமிழ்நாடு
மாவட்டம்  சிவகங்கை
துணை மாவட்டம்  திருப்பத்தூர்
 பகுதி 8 கிமீ 2 12 வார்டுகளில் இல்லை
மழையளவு 892.5mm வெப்பநிலை அதிகபட்சம் 37.7 ° C;
குறைந்தபட்சம் 19.9 ° C துணை மாவட்ட தலைமையகம் திருப்பத்தூர் (20 கி.மீ) மாவட்ட தலைமையகம் சிவகங்கை (55 கி.மீ) மாநில தலைமையகம் சென்னை  (454 கிமீ)
 இரயில் நிலையம்  காரைக்குடி (40 கிமீ)
மக்கள் தொகை 7165 மக்கள்தொகை அடர்த்தி 896 கிமீ மக்கள் தொகை 25.9% செக்ஸ் விகிதம் 978 செக்ஸ் விகிதம் குழந்தை 824 எழுத்தறிவு விகிதம் 71% திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற டவுன் பஞ்சாயத்துகள் (நகர்ப்புற பகுதி) டவுன் பஞ்சாயத்துகள் மக்கள் தொகை பகுதி (Km2) ஜாதி வாரியாக ஆண் பெண் மக்கள் 2011
நெற்குப்பை ‍மொத்த பொது அட்டவணை சாதி  அட்டவணை பழங்குடி குழந்தைமொத்த ஆண் 3,623  பெண் 3,133 ஆகும்.

எங்கள் ஊர் கீழககச்சேரிகூடம்
goole maps;https://goo.gl/maps/AmHu8m226VU2




1.அய்யனார் கோவில்





2.குருசாமி கோவில்




google maps;https://goo.gl/maps/sReynxyBNSw
குருசாமி கோவில் உருவனதுருக்கு கதைகள் உள்ளன.
நெற்குப்பை உள்ள குருசாமிகோவில்
இவரை குருநாதர் என்டு அழைப்பர்.இவர் குருகுலக்கல்வி யன்ட முறையில் மக்கள் பாடம்  சொல்லிகுடுத்தார்.அதனால் குருசாமி என்றும் அழைத்கார்.இவர் நுறு வருடங்கள் முன்பாக மண்ணுக்குள் மக்கள் முன்னாடி  ஜீவசமாதி அடைந்தார்.

அதே போல் பிரான்மலை அருகில் இன்னும் ஜீவசமாதி அடைகிறார்கள்.


மேல தாளம் மார்கழி மாதம் உயிர் உடன் இறங்கினார்.இவர் மண்ணுக்குள் இறங்கிய வேறு ஒருவர் உடையதது.அவர்கள் அனுமதி வாங்கி இறங்கினார்.அந்த இடத்துக்கு சொந்தகாரன் பின்பு குருநாதர் இறங்கிய இடத்த்தில் கோவில் கட்டினர்.பின்பு அந்த கோவில் எல்லரும் வழிபட்டனர்.

வருடம் வருடம் அந்த கோவில் கட்டியவர் வாழையடி வாழையடியாக மார்கழி மாதம்  குருபூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.அந்த கோவில் முன்பாக குளம் உள்ளனர்.

அந்த குளம் செட்டியர் என்பர் வழங்கியதால் செட்டஊராணி என்ற பெயர்  வந்தது..
அவர் சந்தநிதருக்கு அவர் வாழ்ந்த வீட்டை அந்த இலவசமாகப் கொடுக்கபட்டது..

  • முருகன் கோவில்
  • சிவசுப்ரமணிய கோவில்
  •  மாயண்டிகோவில்
  • சிவன்கோவில்

பிடாரியம்மன் கோவில்தோன்றிய வரலாறு

கொன்னியூர் முத்துமாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன்,பிடரியாத்தாள் ,அழகியநாச்சியம்மன்,மரகதவள்ளி,ஐந்து பெயரும் சகோதரிகள்.
சமயபுரம் மாரியம்மன் முதல் அக்கா
கொன்னியூர் முத்துமாரியம்மன்
,பிடரியாத்தாள்
,அழகியநாச்சியம்மன்
,மரகதவள்ளி

இதில் எங்கள் ஊரில் மூன்று அம்மன் கோவில் உள்ளது.

நோயும் வரலாறும்
ஒரு காலத்தில் எங்கள் ஊர் நெற்குப்பை ஒரு வகை நோய் சில பெயருக்கு தாக்கியது இதில் ஒருநாளிக்கு எழு எட்டு மனிதர்கள் இறந்தனர்.இதனை உணர்ந்த பெரியவர்கள் கோடங்கி குறி கேட்டனர்.இதில் அந்த சாமியாடி
பிடாரியம்மன் கோபம் கொண்டுள்ளதால்.பிடாரியம்மன் சிலை வடக்கு திசை நோக்கி சாய்வாக வைக்க சொன்னார்.அதன் படி சிலை சாய்வாக வடக்கு திசை இருந்தது.அண்று முதல் இன்று வரை பிடாரியம்மன் சாய்வாக உள்ளது.
சித்தரை மாதம்
சித்தரை மாதம் முதல் நாள் பால்குடம்  பூத்தட்டுயடுத்து கொன்னியூர் மாரியம்மன் இரவு கொண்டு செல்வர்கள்.கலை நிகழ்ச்சியாக கரகாட்டம் நெற்குப்பையிலும் நடந்து செல்லும் வழியில் பொன்னமராவதி நடைபெறும்,.காலையில் கொன்னியூர் பால்குடம்  பூத்தட்டு சேர்ந்துவிடும். சிவன்கோவில்(மரகதவள்ளி கோவில்)
இவை இரண்டு கோவிலும் நெற்குப்பை உள்ளது. சிவன்கோவிலிருந்து பிடாரியம்மன் கோவிலுக்கு சுரங்கபாதை இருந்தது.அதுவாகவே நாளடைவில் துந்து போனதவகும் வரலாறு கூறிகிறது.
ஒரு

  • அழகிநாச்சியம்மன் கோவில்


  • பெருமாள் கோவில்
  • ஆஞ்சினைய கோவில்


  • விநாயக கோவில்


  • கருப்பர் கோவில்
  • ஐந்து உள்ளது


எங்கள் ஊரில் எல்லா மாதத்தில் திருவிழா தான்.
தை மாதம்
தொடங்கி தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடைபெறும். இதில் ஏராளமான தொழுகள் உள்ளன.இதில் வடக்கு தெரு கிழத்தெரு மேலத்தெரு என மூன்று தெருக்களிலும் மஞ்சுவிரட்டு  நடைபெறும். 
அதற்கு முன்பாக மார்கழி மாதம் உள்ள வெள்ளிகிழமைகளில் வெள்ளி மஞ்சுவிரட்டு நடைபெறும்.

வெள்ளி மஞ்சுவிரட்டு

வெள்ளி மஞ்சுவிரட்டு மூன்று தெருக்களிலும் நடைபெறும்.இதோ கீழத்தெருவில் நடைபெற்றார் மஞ்சுவிரட்டு


 மஞ்சுவிரட்டு

நெற்குப்பை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நடைபெட்டதுருக்கு சான்று 2017


2017 நெற்குப்பை மஞ்சுவிரட்டு

விரட்டு மாடு


மஞ்சுவிரட்டு 2018




எங்கள் ஊர் மஞ்சுவிரட்டு 2018




பகுதி  வடக்குதெரு மஞ்சுவிரட்டு



பகுதி கீழத்தெரு மஞ்சுவிரட்டு


                                            

பகுதி மேலத்தெரு மஞ்சுவிரட்டு


                                           

மாசி மாதம்
மாசி மாதத்தில் ராவத்தாள் என்ற திருவிழா நடைபெறும்

ராவத்தாள்

நெற்குப்பையில் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார்.


மாசி மாதம்மாசி மகம்  முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாக குளங்களில் மண்ணை எடுத்து வந்து கோயில்கள் முன்பாக கட்டபடும்.இதனை மச்சு என்று அழைக்கபடும்.இந்த மச்சு சுற்றியும் கட்டு கட்டபடும்.இந்த கட்டுகுள் வரகு,கேப்பை,சோழம்,பயறு வகைகள்,நெல் அனைத்தும் சிறிதளவு இருக்கும் மச்சு என்று அழைக்கபடும் அதுக்குள் இருக்கும்.ராவத்தாள் கிழவன் கிழவி என்ற மண்ணில் செய்யபட்ட பொம்மை  வைத்துகொண்டும் குண்டுமணிகளையும் கொண்டு கும்மியாட்டாம் கூட்டமாகவோ அல்லது வட்டமாக ஆடுவார்கள்.இதில் முன்று கட்டமாக பாட்டு பாடி கொண்டு ஆடுவார்கள்.
இதில்  கும்மி.யாட்டாம் முடிந்த உடன் அதில் பாடியவர்கள் பலகாரம் ஓருவர் கொருவர் கொடுத்து கொள்வர்கள்.ஓன்பது நாள் முடிக்கும் தொடர்ச்சியாக இரவு கும்மியாட்டம் முடிந்தவுடன் பலகாரம் கும்மி.யாட்டாம் கொட்டியவர்களும் அங்கு இருப்பர்களுக்கு வழங்கபடும்.ஓன்பது நாள்அன்று மாசி மகம் அன்று உலக புகழ் பெற்ற  சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு வாங்கி வந்த பொருட்களை ஏலம் விடுவார்கள்.அதனை ஏரளமான ஏலம் கேட்பார்கள்.பத்தம் நாள் காலை மச்சு என்று அழைக்கபடும் அதனை குளங்களில் கரைத்துவிடுவார்கள் அன்று இரவு  .காய்ச்சி வைத்த பாலினை ஓருவர் ருவர் கொடுத்து கொள்வார்கள்.
சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும்


ஆனிமாதம்


சேவுகமூர்த்தி கோவில்
Google maps;;https://goo.gl/maps/R562no91M4x
நெற்குப்பை சேகரம் பரியமருதுபட்டியில் சேவுகமூர்த்தி கோவில் உள்ளது.





இதில் ஆனிமாதம்
இங்கு பத்து நாட்கள் திருவிழா வெகு சிறப்பக நடக்கும். நெற்குப்பையில் இன்று 15.6.2018 ஆனி முதல் நாள் வெள்ளிகிழமை அதி காலையில் சிவன் கோவில் இருந்து
சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு 
சேவுக பெருமாள் அய்யனாரும்பூர்ண கலாதேவியும்புஷ்ப கலாதேவியும் சிறப்பு
அலங்காரத்தில் பள்ளிக்குடம் வருகை அருள் பாலித்தகாட்சிகள்...

 நம்ம ஊர் நெற்குப்பை இன் பிரமாண்ட திருவிழா  2018 #அழைப்பிதழ்


சிவகங்கைசீமை::

நேமாநாடு
திருப்பத்தூர் தாலுகா
நம்ம ஊர் நெற்குப்பை சேகரம் பரியாமருதுபட்டி அருள்மிகு சேவுகமூத்தி அய்யனார் திருக்கோவிலில் வருடம் தோரும் ஆனி மாதம் பத்து நாள் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது...
இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது..
இந்தியாவிலேயே சேவுகமூர்த்தி அய்யனார் சுவாமி பிரமாண்ட திருத்தேரில் வலம்வரும் ஊர் நம்ம நெற்குப்பை சேகரம் பரியாமருதுபட்டி மட்டுமே... 15.06.2018 ஆனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 to 9.00 சுவாமி பள்ளிக்கூடம் வருகிறது.
திருவிழா நாள் கீழ்கண்டவாறு: 18.06.2018 மாலை 4.00 மணிக்கு சுவாமி பரியாமருதுபட்டி செல்கிறது.

1ம் நாள் மண்டகப்படி.18.06.2018 அரசு காவல்துறை மண்டகபுடி (காப்புகட்டுதல்)

2ம் நாள் மண்டகப்படி.19.06.2018 தொழிலாளர்கள் மண்டகபுடி
3ம் நாள் மண்டகப்படி.20.06.2018 வடக்குத்தெரு நாட்டார்கள் மண்டகபுடி

4
ம் நாள் மண்டகப்படி.21.06.2018 கீழத்தெரு நாட்டார்கள் மண்டகபுடி

5
ம் நாள் மண்டகப்படி.22.06.2018சுவாமிக்கு திருகல்யாணம் துவார் ஊரார்கள் மண்டகபுடி


6ம் நாள் மண்டகப்படி.23.06.2018கழுவன் திருவிழா நகரத்தார்கள் மண்டகபுடி

7ம் நாள் மண்டகப்படி.24.06.2018கிளாமடம் ஊரார்கள் மண்டகபுடி
8ம் நாள் மண்டகப்படி.25.06.2018முரு.பழ.குடும்பத்தார் மண்டகபுடி
9ம் நாள் மண்டகப்படி 26.06.2018 பிரமாண்ட தேரோட்டம் பேட்டையார்கள்
10ம் நாள் மண்டகப்படி.27.06.2018மஞ்சுவிரட்டு..வள்ளியப்ப செட்டியார் வகையறா 




சீறி பாய்ந்த காளை

.28.06.2018 11ம் நாள் மாலை சுவாமி நெற்குப்பை சென்று P.RM.குடும்த்தார் மண்டகப்படி.29.06.2018 மண்டகப்படி செய்து சுவாமி இருப்பிடம் சேருதல்.

#ஆனி#1ம்தேதி #தொடங்கி

#ஆனி#15ம்தேதி #நிறைவடைகிறது

ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் கோவிலை சுற்றி.ஆடல் பாடல்,கச்சேரி,நாடகம்,படம்,கரகாட்டம்,என வெகு சிறப்பாக நடைபெரும் பக்த கோடிகள் அனைவரும் 🙏

வருக சேவுகமூர்த்தி அய்யனாரின் அருள் பெருக...

சேவுகமூர்த்தி சாமியும் விளைந்த நெல் வயலும்

நெற்குப்பை உள்ள வயல்கெல்லாம் வறச்சியாக இருந்தது. கண்மாய்கள் தண்ணிர்
 இல்லை.ஒரு  தடவை தண்ணிர் வந்தால் வயல்கெல்லாம் விளையந்தரும் என்று  மக்கள் எண்ணினார்.ஆனால் வரவில்லை.அதனால் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கண்மாய் தண்ணீர் இருந்தது.அதனால் அந்த ஊரார்கள் கேட்டார்கள் அவர்கள் தர மறுத்துவிட்டார்கள்.சேவுகமூர்த்தி சாமி கண்மாய் உடைத்தகவும் அதனால் அந்த ஊரார்கள் விரட்டி வந்ததாகவும் பரியமருதுபட்டி சேவுகமூர்த்தி கோவிலுக்கு சென்றாதாகவும் இதனால் ஏனாதி ஊரார்கள் சேவுகமூர்த்தி சாமி தான் என்று செண்டுவிட்டரர்கள்.நெற்குப்பை உள்ள வயல்கள் விளைந்ததாகவும் வரலாறு கதைகள் கூறிகிறது


1 comment:

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...