Saturday, August 25, 2018

பொய்க்கால் குதிரை


புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும்பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும்பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.
கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு



உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

தெரு குத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில்மாரியம்மன் விழாக்களில்சிவன்திருமால்கணேசன்ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கடலூர்விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும்துரியோதனனுக்கு சிவப்பும்துச்சாதனுக்கு மஞ்சள்பீமனுக்கு மேகவண்ணமும்கிருஷ்ணனுக்கு பச்சையும்திரௌபதிக்கு இளஞ்சிவப்பும்அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.
தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகிஅரசனைப் புகழ்பவனாகவும்தூதுவனாகவும்வேலைக்காரனகவும்கோமாளியாகவும்பொது மக்களுள் ஒருவனாகவும்மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கிகாட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவிகாலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம்முடிவுப்பாட்டுமங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பசெய்வதனை காணலாம்.

வில்லுப்பாட்டு

இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் வில்லிசை 'அல்லது 'வில்லுப்பாட்டு மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்கொடை விழா எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள்தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும்உடுக்குகுடம்தாளம்கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் புலவர் எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும்பாட்டுப் பாடுவதிலும்நடிப்பதிலும்காலத்திற்குத் தக்க அரசியல்பொருளாதாரசமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ஐயன் கதை எனப்படும் சாஸ்தா கதை யாகும். இதிகாசம்புராணம் தொடர்பான கதைகள்சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.

1 comment:

  1. Titanium forging - Titanium Art
    At titanium trimmer the end of 2020, he started mens titanium earrings producing new models remmington titanium of the design process of the world's biggest titanium guitar chords diamond racing car. He and titanium sponge his team of

    ReplyDelete

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...