Wednesday, August 29, 2018

மதகுபட்டி

                                                    மதகுபட்டி
Jump to navigationJump to search

மதகுபட்டி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
ஆளுநர்பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர்எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்G. லதா இ. ஆ. ப. 
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதிசிவகங்கை
மக்களவை உறுப்பினர்
பி.ஆர்.செந்தில்நாதன்(அஇஅதிமுக)
மக்கள் தொகை3,308
நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)

மதகுபட்டி ஊராட்சி (Madagupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிசிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3308 ஆகும். இவர்களில் பெண்கள் 1700 பேரும் ஆண்கள் 1608 பேரும் உள்ளனர்


அடிப்படை வசதிகள்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்390
சிறு மின்விசைக் குழாய்கள்16
கைக்குழாய்கள்37
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்10
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள்33
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்3
ஊரணிகள் அல்லது குளங்கள்8
விளையாட்டு மையங்கள்1
சந்தைகள்8
ஊராட்சி ஒன்றியச் சாலைகள்112
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்8
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்8
சிற்றூர்கள்:
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்
  1. சொக்கலிங்கபுரம்
  2. சலுகைபுரம்
  3. தட்சன்புதுபட்டி
  4. உச்சிபுளிபட்டி
  5. ஊத்துபட்டி
  6. கீழவளவு
  7. மேலவளவு
  8. பெரியார் நகர்
  9. மதகுபட்டி

ஆனால் எங்கள்  ஊரின் ஆட்டநாயகன் வெள்ளையன்

கோட்டையிருப்பு


கோட்டையிருப்பு
                    இதுதான் என்னோட ஊரு இந்த ஊருக்கு ஏன் கோட்டையிருப்புனு பேர் வந்துச்சுனு தெரியுமா  என்னோட சின்ன வயசுல பசங்களோட இருக்கும் பொது ஏன் கோட்டையிருப்புனு வந்துச்சுனு கேக்கும்போது பசங்க நம்ம ஊர்ல அந்த காலத்தில் கோட்டைகள் இருந்த்துசுனு சொன்னாங்க அதுக்கப்பறம் எங்க ஊர் பெரியோர்ட்ட  கேக்கும்போது தான் சொன்னாங்க




இதுதான் எங்க ஊர் முகப்பு இதை கட்டி       வருடங்கள் ஆகின்றன இது எங்க        அவர்களால் கட்டப்பட்டது





இதுதான் எங்க ஊர்ல முக்கியமான  இடம் இந்த மரம்தான் . இந்த மரத்த நட்டு சுமார்   12  ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த  இடத்த மட்டும் எங்களால மறக்கவே முடியாது இந்த மரத்துலதா எங்க பசங்களோட நினைவு எல்லாமே இருக்கு இங்கதான் எப்பயுமே உக்காந்து இருப்போம் இங்க இருக்குற சுகம் வேற எங்கயும் இருக்காதுன்னு என்னால மட்டும் இல்ல எங்க பசங்க எல்லாருமே சொல்ல முடியும்
 நாங்க பெரும்பாலும் எந்த இடத்துக்கு போரதுனாலும் இங்க வந்து உக்காந்துட்டுதான் போவோம் ஏன்னா இது எங்களுக்கு அப்படி ஒரு ராசியான இடம் வருசத்துல ரெண்டு மாசம் மட்டும் இங்க உக்கார மாட்டோம் என்ன அது இலையுதிர்காலம் அப்பா இலை எல்லாம் உதிர்ந்து விடும் அதனால அந்த  ரெண்டு மாசத்துக்கு அப்பறம் உள்ள எல்லா நாளும் இங்கதான் இருப்போம்.
                   
  இதல்லாம் நா உங்கள்ட்ட ஏன் சொல்றேனா இந்த மரத்த எங்க பசங்க யாராலயும் மறக்க முடியாது நீங்களும் இங்க வந்து இருந்து பார்த்த இந்த மரத்த விட்டு போக உங்களுக்கு  மனசே வராது...





HOTTAL SHANMUGA PARADISE LODGE

இந்த ஹோட்டல் பெயர்  hotal shanmuga paradise lodge இந்த ஹோட்டல் இருக்கும் இடம் மதுரை ரோடு கோட்டையிருப்பு இதை அஆரம்பித்து சுமார் 8 வருடங்கள் ஆகிறது.இந்த ஹோட்டல எல்லாம் தரமாக தான் இருக்கும் அனால் விலைதான் கொஞ்சம் அதிகம் .இந்த ஹோட்டல்  பயனர்கலுக்காக ஆரம்பிக்கபட்டது.வழிபோக்கர்கள் இந்த வழியாக செல்லும்போது இந்த ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு அல்லது தங்கிவிட்டு செல்வார்கள். விடுதியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது.
              இந்த வுனவகத்தில் நல்ல ருசியாக இருப்பது சூடான சமோசா விலை ரூ 10 சமொசவில் உள்ள மாசாலா நன்றாக இருக்கும் அதை நானும் என் நபர்களும் தினமும் அல்லது அடிக்கடி சமோசா சாப்பிட செல்வோம் அந்த பயணம் நான்றாக இருக்கும். 

  ஆரம்பத்தில் இந்த உணவகம் எளிதாக கட்டப்பட்டது .பிறகு போகப்போக  உணவகத்தை மேம்படுத்தினர் .இதில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப ஊஞ்சல்,யேத்துமச்சான் இறக்குமச்சான் ,புல்வெளிகள் நிறைந்து பயனர்கள் உட்கார ஏதுவாக அமைந்துள்ளது .பொதுவாக இந்த விடுதியில் விடுமுறை நாட்களில் மட்டும் பயனர்கள் வந்து விடுதியே கூட்டமாக இருக்கும் மற்ற நாட்களில் எப்பொழுதும் போல பயனர்கள் வந்து செல்வார்கள். 


Monday, August 27, 2018

நெற்குப்பை

நெற்குப்பை


  google maps;https://goo.gl/maps/daLA9Ye5Yvs
நெற்குப்பை பெயர்காரணம்;
நெற்குப்பையில் நெல் வயல்கெல்லம் கண்டமிடமெல்லாம் குப்பை போன்று காணப்பட்டதல் நெற்குப்பை என்று பெயர் வந்தது. கண்டமிடமெல்லாம் விளைன்திர்க்கும்.

நெல்கள் குப்பை  போன்று காணபடுவதால் பெயர் நெற்குப்பை என்று வந்தது.முப்பது மேற்பட்ட கோவில்கள்உள்ளன.இங்கு உள்ள மக்கள் விவசாயும் கால்நடைகள் மேய்யப்பத பிரதான தொழிகள் இருந்தது. விவசாயம் பிரதான தொழிகள் இருந்தது.50 சதவிகிதம் பேர் மட்டும் விவசாயம் செய்கிறார்கள்.நெற்குப்பை பிரான்மலை உள்ளது.பூலங்குறிச்சி மலை உள்ளது.
அடிப்படைகள் நாடு இந்தியா தமிழ்நாடு
மாவட்டம்  சிவகங்கை
துணை மாவட்டம்  திருப்பத்தூர்
 பகுதி 8 கிமீ 2 12 வார்டுகளில் இல்லை
மழையளவு 892.5mm வெப்பநிலை அதிகபட்சம் 37.7 ° C;
குறைந்தபட்சம் 19.9 ° C துணை மாவட்ட தலைமையகம் திருப்பத்தூர் (20 கி.மீ) மாவட்ட தலைமையகம் சிவகங்கை (55 கி.மீ) மாநில தலைமையகம் சென்னை  (454 கிமீ)
 இரயில் நிலையம்  காரைக்குடி (40 கிமீ)
மக்கள் தொகை 7165 மக்கள்தொகை அடர்த்தி 896 கிமீ மக்கள் தொகை 25.9% செக்ஸ் விகிதம் 978 செக்ஸ் விகிதம் குழந்தை 824 எழுத்தறிவு விகிதம் 71% திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற டவுன் பஞ்சாயத்துகள் (நகர்ப்புற பகுதி) டவுன் பஞ்சாயத்துகள் மக்கள் தொகை பகுதி (Km2) ஜாதி வாரியாக ஆண் பெண் மக்கள் 2011
நெற்குப்பை ‍மொத்த பொது அட்டவணை சாதி  அட்டவணை பழங்குடி குழந்தைமொத்த ஆண் 3,623  பெண் 3,133 ஆகும்.

எங்கள் ஊர் கீழககச்சேரிகூடம்
goole maps;https://goo.gl/maps/AmHu8m226VU2




1.அய்யனார் கோவில்





2.குருசாமி கோவில்




google maps;https://goo.gl/maps/sReynxyBNSw
குருசாமி கோவில் உருவனதுருக்கு கதைகள் உள்ளன.
நெற்குப்பை உள்ள குருசாமிகோவில்
இவரை குருநாதர் என்டு அழைப்பர்.இவர் குருகுலக்கல்வி யன்ட முறையில் மக்கள் பாடம்  சொல்லிகுடுத்தார்.அதனால் குருசாமி என்றும் அழைத்கார்.இவர் நுறு வருடங்கள் முன்பாக மண்ணுக்குள் மக்கள் முன்னாடி  ஜீவசமாதி அடைந்தார்.

அதே போல் பிரான்மலை அருகில் இன்னும் ஜீவசமாதி அடைகிறார்கள்.


மேல தாளம் மார்கழி மாதம் உயிர் உடன் இறங்கினார்.இவர் மண்ணுக்குள் இறங்கிய வேறு ஒருவர் உடையதது.அவர்கள் அனுமதி வாங்கி இறங்கினார்.அந்த இடத்துக்கு சொந்தகாரன் பின்பு குருநாதர் இறங்கிய இடத்த்தில் கோவில் கட்டினர்.பின்பு அந்த கோவில் எல்லரும் வழிபட்டனர்.

வருடம் வருடம் அந்த கோவில் கட்டியவர் வாழையடி வாழையடியாக மார்கழி மாதம்  குருபூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.அந்த கோவில் முன்பாக குளம் உள்ளனர்.

அந்த குளம் செட்டியர் என்பர் வழங்கியதால் செட்டஊராணி என்ற பெயர்  வந்தது..
அவர் சந்தநிதருக்கு அவர் வாழ்ந்த வீட்டை அந்த இலவசமாகப் கொடுக்கபட்டது..

  • முருகன் கோவில்
  • சிவசுப்ரமணிய கோவில்
  •  மாயண்டிகோவில்
  • சிவன்கோவில்

பிடாரியம்மன் கோவில்தோன்றிய வரலாறு

கொன்னியூர் முத்துமாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன்,பிடரியாத்தாள் ,அழகியநாச்சியம்மன்,மரகதவள்ளி,ஐந்து பெயரும் சகோதரிகள்.
சமயபுரம் மாரியம்மன் முதல் அக்கா
கொன்னியூர் முத்துமாரியம்மன்
,பிடரியாத்தாள்
,அழகியநாச்சியம்மன்
,மரகதவள்ளி

இதில் எங்கள் ஊரில் மூன்று அம்மன் கோவில் உள்ளது.

நோயும் வரலாறும்
ஒரு காலத்தில் எங்கள் ஊர் நெற்குப்பை ஒரு வகை நோய் சில பெயருக்கு தாக்கியது இதில் ஒருநாளிக்கு எழு எட்டு மனிதர்கள் இறந்தனர்.இதனை உணர்ந்த பெரியவர்கள் கோடங்கி குறி கேட்டனர்.இதில் அந்த சாமியாடி
பிடாரியம்மன் கோபம் கொண்டுள்ளதால்.பிடாரியம்மன் சிலை வடக்கு திசை நோக்கி சாய்வாக வைக்க சொன்னார்.அதன் படி சிலை சாய்வாக வடக்கு திசை இருந்தது.அண்று முதல் இன்று வரை பிடாரியம்மன் சாய்வாக உள்ளது.
சித்தரை மாதம்
சித்தரை மாதம் முதல் நாள் பால்குடம்  பூத்தட்டுயடுத்து கொன்னியூர் மாரியம்மன் இரவு கொண்டு செல்வர்கள்.கலை நிகழ்ச்சியாக கரகாட்டம் நெற்குப்பையிலும் நடந்து செல்லும் வழியில் பொன்னமராவதி நடைபெறும்,.காலையில் கொன்னியூர் பால்குடம்  பூத்தட்டு சேர்ந்துவிடும். சிவன்கோவில்(மரகதவள்ளி கோவில்)
இவை இரண்டு கோவிலும் நெற்குப்பை உள்ளது. சிவன்கோவிலிருந்து பிடாரியம்மன் கோவிலுக்கு சுரங்கபாதை இருந்தது.அதுவாகவே நாளடைவில் துந்து போனதவகும் வரலாறு கூறிகிறது.
ஒரு

  • அழகிநாச்சியம்மன் கோவில்


  • பெருமாள் கோவில்
  • ஆஞ்சினைய கோவில்


  • விநாயக கோவில்


  • கருப்பர் கோவில்
  • ஐந்து உள்ளது


எங்கள் ஊரில் எல்லா மாதத்தில் திருவிழா தான்.
தை மாதம்
தொடங்கி தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடைபெறும். இதில் ஏராளமான தொழுகள் உள்ளன.இதில் வடக்கு தெரு கிழத்தெரு மேலத்தெரு என மூன்று தெருக்களிலும் மஞ்சுவிரட்டு  நடைபெறும். 
அதற்கு முன்பாக மார்கழி மாதம் உள்ள வெள்ளிகிழமைகளில் வெள்ளி மஞ்சுவிரட்டு நடைபெறும்.

வெள்ளி மஞ்சுவிரட்டு

வெள்ளி மஞ்சுவிரட்டு மூன்று தெருக்களிலும் நடைபெறும்.இதோ கீழத்தெருவில் நடைபெற்றார் மஞ்சுவிரட்டு


 மஞ்சுவிரட்டு

நெற்குப்பை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நடைபெட்டதுருக்கு சான்று 2017


2017 நெற்குப்பை மஞ்சுவிரட்டு

விரட்டு மாடு


மஞ்சுவிரட்டு 2018




எங்கள் ஊர் மஞ்சுவிரட்டு 2018




பகுதி  வடக்குதெரு மஞ்சுவிரட்டு



பகுதி கீழத்தெரு மஞ்சுவிரட்டு


                                            

பகுதி மேலத்தெரு மஞ்சுவிரட்டு


                                           

மாசி மாதம்
மாசி மாதத்தில் ராவத்தாள் என்ற திருவிழா நடைபெறும்

ராவத்தாள்

நெற்குப்பையில் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார்.


மாசி மாதம்மாசி மகம்  முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாக குளங்களில் மண்ணை எடுத்து வந்து கோயில்கள் முன்பாக கட்டபடும்.இதனை மச்சு என்று அழைக்கபடும்.இந்த மச்சு சுற்றியும் கட்டு கட்டபடும்.இந்த கட்டுகுள் வரகு,கேப்பை,சோழம்,பயறு வகைகள்,நெல் அனைத்தும் சிறிதளவு இருக்கும் மச்சு என்று அழைக்கபடும் அதுக்குள் இருக்கும்.ராவத்தாள் கிழவன் கிழவி என்ற மண்ணில் செய்யபட்ட பொம்மை  வைத்துகொண்டும் குண்டுமணிகளையும் கொண்டு கும்மியாட்டாம் கூட்டமாகவோ அல்லது வட்டமாக ஆடுவார்கள்.இதில் முன்று கட்டமாக பாட்டு பாடி கொண்டு ஆடுவார்கள்.
இதில்  கும்மி.யாட்டாம் முடிந்த உடன் அதில் பாடியவர்கள் பலகாரம் ஓருவர் கொருவர் கொடுத்து கொள்வர்கள்.ஓன்பது நாள் முடிக்கும் தொடர்ச்சியாக இரவு கும்மியாட்டம் முடிந்தவுடன் பலகாரம் கும்மி.யாட்டாம் கொட்டியவர்களும் அங்கு இருப்பர்களுக்கு வழங்கபடும்.ஓன்பது நாள்அன்று மாசி மகம் அன்று உலக புகழ் பெற்ற  சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு வாங்கி வந்த பொருட்களை ஏலம் விடுவார்கள்.அதனை ஏரளமான ஏலம் கேட்பார்கள்.பத்தம் நாள் காலை மச்சு என்று அழைக்கபடும் அதனை குளங்களில் கரைத்துவிடுவார்கள் அன்று இரவு  .காய்ச்சி வைத்த பாலினை ஓருவர் ருவர் கொடுத்து கொள்வார்கள்.
சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும்


ஆனிமாதம்


சேவுகமூர்த்தி கோவில்
Google maps;;https://goo.gl/maps/R562no91M4x
நெற்குப்பை சேகரம் பரியமருதுபட்டியில் சேவுகமூர்த்தி கோவில் உள்ளது.





இதில் ஆனிமாதம்
இங்கு பத்து நாட்கள் திருவிழா வெகு சிறப்பக நடக்கும். நெற்குப்பையில் இன்று 15.6.2018 ஆனி முதல் நாள் வெள்ளிகிழமை அதி காலையில் சிவன் கோவில் இருந்து
சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு 
சேவுக பெருமாள் அய்யனாரும்பூர்ண கலாதேவியும்புஷ்ப கலாதேவியும் சிறப்பு
அலங்காரத்தில் பள்ளிக்குடம் வருகை அருள் பாலித்தகாட்சிகள்...

 நம்ம ஊர் நெற்குப்பை இன் பிரமாண்ட திருவிழா  2018 #அழைப்பிதழ்


சிவகங்கைசீமை::

நேமாநாடு
திருப்பத்தூர் தாலுகா
நம்ம ஊர் நெற்குப்பை சேகரம் பரியாமருதுபட்டி அருள்மிகு சேவுகமூத்தி அய்யனார் திருக்கோவிலில் வருடம் தோரும் ஆனி மாதம் பத்து நாள் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது...
இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது..
இந்தியாவிலேயே சேவுகமூர்த்தி அய்யனார் சுவாமி பிரமாண்ட திருத்தேரில் வலம்வரும் ஊர் நம்ம நெற்குப்பை சேகரம் பரியாமருதுபட்டி மட்டுமே... 15.06.2018 ஆனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 to 9.00 சுவாமி பள்ளிக்கூடம் வருகிறது.
திருவிழா நாள் கீழ்கண்டவாறு: 18.06.2018 மாலை 4.00 மணிக்கு சுவாமி பரியாமருதுபட்டி செல்கிறது.

1ம் நாள் மண்டகப்படி.18.06.2018 அரசு காவல்துறை மண்டகபுடி (காப்புகட்டுதல்)

2ம் நாள் மண்டகப்படி.19.06.2018 தொழிலாளர்கள் மண்டகபுடி
3ம் நாள் மண்டகப்படி.20.06.2018 வடக்குத்தெரு நாட்டார்கள் மண்டகபுடி

4
ம் நாள் மண்டகப்படி.21.06.2018 கீழத்தெரு நாட்டார்கள் மண்டகபுடி

5
ம் நாள் மண்டகப்படி.22.06.2018சுவாமிக்கு திருகல்யாணம் துவார் ஊரார்கள் மண்டகபுடி


6ம் நாள் மண்டகப்படி.23.06.2018கழுவன் திருவிழா நகரத்தார்கள் மண்டகபுடி

7ம் நாள் மண்டகப்படி.24.06.2018கிளாமடம் ஊரார்கள் மண்டகபுடி
8ம் நாள் மண்டகப்படி.25.06.2018முரு.பழ.குடும்பத்தார் மண்டகபுடி
9ம் நாள் மண்டகப்படி 26.06.2018 பிரமாண்ட தேரோட்டம் பேட்டையார்கள்
10ம் நாள் மண்டகப்படி.27.06.2018மஞ்சுவிரட்டு..வள்ளியப்ப செட்டியார் வகையறா 




சீறி பாய்ந்த காளை

.28.06.2018 11ம் நாள் மாலை சுவாமி நெற்குப்பை சென்று P.RM.குடும்த்தார் மண்டகப்படி.29.06.2018 மண்டகப்படி செய்து சுவாமி இருப்பிடம் சேருதல்.

#ஆனி#1ம்தேதி #தொடங்கி

#ஆனி#15ம்தேதி #நிறைவடைகிறது

ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் கோவிலை சுற்றி.ஆடல் பாடல்,கச்சேரி,நாடகம்,படம்,கரகாட்டம்,என வெகு சிறப்பாக நடைபெரும் பக்த கோடிகள் அனைவரும் 🙏

வருக சேவுகமூர்த்தி அய்யனாரின் அருள் பெருக...

சேவுகமூர்த்தி சாமியும் விளைந்த நெல் வயலும்

நெற்குப்பை உள்ள வயல்கெல்லாம் வறச்சியாக இருந்தது. கண்மாய்கள் தண்ணிர்
 இல்லை.ஒரு  தடவை தண்ணிர் வந்தால் வயல்கெல்லாம் விளையந்தரும் என்று  மக்கள் எண்ணினார்.ஆனால் வரவில்லை.அதனால் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கண்மாய் தண்ணீர் இருந்தது.அதனால் அந்த ஊரார்கள் கேட்டார்கள் அவர்கள் தர மறுத்துவிட்டார்கள்.சேவுகமூர்த்தி சாமி கண்மாய் உடைத்தகவும் அதனால் அந்த ஊரார்கள் விரட்டி வந்ததாகவும் பரியமருதுபட்டி சேவுகமூர்த்தி கோவிலுக்கு சென்றாதாகவும் இதனால் ஏனாதி ஊரார்கள் சேவுகமூர்த்தி சாமி தான் என்று செண்டுவிட்டரர்கள்.நெற்குப்பை உள்ள வயல்கள் விளைந்ததாகவும் வரலாறு கதைகள் கூறிகிறது


ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...